மார்ச் 24, 2022
தவக்காலம் மூன்றாம் வாரத்தின் வியாழக்கிழமை
இன்றைய வாசகங்கள்

இயேசு ஊமைப் பேய் ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்தார். பேய் வெளியேறியதும், பேச்சற்றிருந்த அந்த மனிதர் பேசினார்; மக்கள் கூட்டத்தினர் வியப்படைந்தனர். லூக்கா 11:14
இறைவார்த்தையை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் அறிவிப்பதிலிருந்து உங்களைத் தடுப்பது எது? நற்செய்தி மிகவும் அவசரமாகத் தேவைப்படும் மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வாழ்வில் குழப்பமடைந்து, மேலும் அதிகமான குழப்பத்திற்கும் அழிவிற்கும் இட்டுச்செல்லும் தவறான பாதையில் நடந்துகொண்டிருப்போர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் அமைதியாக இருக்கிறோம். ஏன்?
மேலே உள்ள நற்செய்தி, ஒரு பேயின் காரணமாகப் பேச முடியாமல் இருந்த ஒருவரைப் பற்றிக் கூறுகிறது. இயேசு இந்தப் பேயை ஓட்டியபோது, பேச்சற்றிருந்த அந்த மனிதர் பேசினார்; பலரும் வியப்படைந்தனர். பெரும்பாலும், இந்தப் பேய் அந்த மனிதரை முழுமையாகப் பீடித்திருந்திருக்கலாம்; அவர் அனுபவித்த ஒடுக்குமுறை, பேசும் திறனையே அவரிடமிருந்து பறித்திருந்திருக்கலாம். இந்தப் பேயின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும், அவர் தங்குதடையின்றிப் பேசினார்.
அதே அளவுக்குப் பேய்களின் ஆதிக்கத்தை நாம் அனுபவிக்காமல் இருக்கலாம். ஆனாலும், இதுபோன்ற ஊமை ஆவிகளால் நாம் அடிக்கடி தடுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறோம். கடவுள் தெரிவிக்க விரும்பும் செய்தி யாருக்கு மிகவும் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு நற்செய்தியைத் தங்குதடையின்றி, உண்மையோடு, உடனடியாக அறிவிக்க நாம் அஞ்சுமாறு செய்வதற்குத் தீயவன் அடிக்கடி நம்மீது செல்வாக்குச் செலுத்த முயல்கிறான். நம் நம்பிக்கையை மற்றொருவரோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது, “ஊமை ஆவிகள்” பல நேரங்களில் நம்மைத் தடுக்கலாம், குழப்பலாம் அல்லது ஒருவித அச்சத்தால் நம்மை நிரப்பலாம். அவற்றின் அதிகாரத்திற்குள் நாம் முழுமையாக விழுவது அரிதாக இருக்கலாம். இருந்தாலும், அவற்றின் செல்வாக்குக்கும் தடைகளுக்கும் நாம் அடிக்கடி உள்ளாகிறோம்.
இந்தக் கொடிய ஆவிகள் உண்மையாகவே இருப்பதையும், எத்தனையோ பேர் கேட்க வேண்டிய உண்மையின் செய்தியை நாம் அறிவிக்கவிடாமல் நம்மை மௌனமாக்க அவை எடுக்கும் முயற்சிகளையும் பற்றி இன்று சிந்தியுங்கள். அவற்றின் செல்வாக்கைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. இத்தகைய எல்லா ஆவிகள்மீதும் இயேசுவுக்கு முழு அதிகாரம் உண்டு. நாம் அவரை அனுமதித்தால், நம்மீது அவை செலுத்தும் செல்வாக்கை அடக்க அவர் தயங்கமாட்டார். மற்றவர்கள் அவரையும் அவரது நிறைவான அன்பையும் அறிந்துகொள்ளும்படி, அவரது அன்பின் செய்தியை நாம் எந்தத் தயக்கமுமின்றி அறிவிக்க நம்மை விடுவிக்க அவர் விரும்புகிறார். உண்மை மற்றும் அன்பின் அத்தகைய கருவியாக உங்களைப் பயன்படுத்த அவரை அனுமதியுங்கள்.
இறைவனின் நித்திய வாக்கே, தேவையில் இருப்போருக்கு உமது அன்பின் வார்த்தைகளைப் பேச நீர் என்னை அழைக்கும்போது, சில வேளைகளில் நான் அச்சத்திற்கு ஆளாகிறேன். என்ன சொல்வதென்று குழம்பி, என் பேச்சு அடைபட்டுவிட்டதுபோல் உணர்கிறேன். அன்பு ஆண்டவரே, உமது வார்த்தையின் புனிதமான கருவியாக நான் விளங்கவும், மிகவும் தேவையில் இருப்போருக்கு உமது உண்மையை நம்பிக்கையுடன் அறிவிக்கவும் தயவுசெய்து என்னை விடுவித்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
சிலுவையடியில் 40 நாள்கள்:
நம் புனித அன்னையின் இதயத்திலிருந்து ஓர் அன்புப் பார்வை
இருபதாம் சிந்தனை – இறைவனின் செம்மறியின் மாசின்மை
(தவக்காலம் மூன்றாம் வாரத்தின் வியாழக்கிழமை)
தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்
தவக்காலத்திற்கான இரு சிறந்த நூல்கள்:
தவக்கால மற்றும் உயிர்ப்புக்காலச் சிந்தனைகள்
கூடுதல் சிந்தனைகளுடனும் மேலும் விரிவான பொருளடக்கத்துடனும் 2022 தவக்காலம் & உயிர்ப்புக்காலத்திற்காகப் புதுப்பிக்கப்பட்டது
தவக்கால மற்றும் உயிர்ப்புக்காலச் சிந்தனைகள் என்பது கத்தோலிக்க அன்றாடச் சிந்தனைகள் நூல்வரிசையில். உள்ள நான்கு நூல்களில் ஒன்றாகும். அன்றைய நற்செய்தியைப் பற்றிய சிந்தனைகளை நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், விசுவாசத்திற்கு உண்மையாயும், எளிய வாழ்க்கையோடு தொடர்புடைய முறையிலும் வழங்கும் இந்த இறைபக்தி நூல், அன்றாடத் தியானத்திற்கும் இறைவேண்டலுக்கும் ஒரு சிறந்த துணையாகும். ஞாயிறு ஆண்டுகளான A, B & C, அன்றாடத் திருப்பலிகளுக்கான அனைத்து நற்செய்தித் தேர்வுகள், எல்லா விழாக்கள் மற்றும் பெருவிழாக்கள் உட்பட, தேர்ந்தெடுக்கக்கூடிய ஒவ்வொரு நற்செய்திப் பகுதிக்கும் சிந்தனைகளை வழங்குவதால், எந்தத் திருவழிபாட்டு ஆண்டிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவக்காலத்திலும் உயிர்ப்புக்காலத்திலும் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் உங்கள் இதயத்தை இன்னும் முழுமையாக மாற்றியமைக்க இடமளியுங்கள்! இது மென் அட்டை நூல் & மின்னூல் வடிவங்களிலும் கிடைக்கிறது!
சிலுவையடியில் 40 நாட்கள்:
நம் புனித அன்னையின் இதயத்திலிருந்து ஓர் அன்புப் பார்வை
நம் புனித அன்னை தம் அன்பு மகனுக்கு இழைக்கப்பட்ட பெரும் துன்பத்தைத் தாங்கியபோது, அவரது உள்ளத்திலும் இதயத்திலும் நிலவியவற்றை இறைவேண்டலுடன் தியானிக்க இந்த அன்றாட ஆன்மிக வழிகாட்டி உங்களை அழைக்கிறது. அன்னை மரியா முழுமையான நம்பிக்கையோடும் அன்போடும் பக்தியோடும் தம் மகனின் சிலுவையை எதிர்கொண்டார். தம் மகனின் வாழ்நாள் முழுவதும் அவர் காட்டிய உண்மைப்பற்று அசைக்க முடியாததாக இருந்தது. நீண்ட அந்த மூன்று மணி நேரமும் சிலுவையின் முன் அவர் நின்றபோது, அந்த உண்மைப்பற்று ஒருபோதும் தளரவில்லை.







